நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு

கோலாலம்பூர்:

இன்று காலை 8 மணி முதல், இங்குள்ள ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் இல்ல வளாகத்திற்குள் பல வாகனங்கள் வந்து செல்வது கண்டறியப்பட்டது.

அப்பகுதிக்குள் நுழைந்து வெளியேறிய இரண்டு வாகனங்கள், நஜிப்பைச் சந்திக்க வந்திருந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை என்று நம்பப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், பொதுமக்கள் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, மஞ்சள் நிற பாதுகாப்பு கயிறு பொருத்தப்பட்டு, போலிசாரால் அந்த இல்லம் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை முதல் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் போலிசாரின் கட்டுப்பாடு தொடங்கியுள்ளது.

கூடுதலாக, நேற்று இரவு நஜிப்பை காஜாங் சிறையிலிருந்து அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படும் ஒரு கார் இன்று மாலை அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவதும் காணப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset