செய்திகள் மலேசியா
சம்பளம் மட்டுமல்ல, மாட் சாபு தனது அலவன்ஸையும் வழங்க வேண்டும்: ஜாஹித்
மலாக்கா:
குற்றத்தின் வகையைப் பொருட்படுத்தாமல், கைதிகள் தங்கள் தண்டனைக் காலத்தின் பாதியை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு சட்ட வழிமுறையை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, டத்தோஸ்ரீ முகமது சாபு தனது முழு அமைச்சர் சம்பளத்தையும் நன்கொடையாக வழங்க முன்வந்ததை, டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஒரு நல்ல நடவடிக்கை என்று விவரித்தார்.
உண்மையில், இந்த முயற்சியில் அவர் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், அமானா கட்சியின் தலைவர் தான் பெறும் அலவன்ஸையும் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கூறினார்.
நல்லது. அது ஒரு நல்ல யோசனை. உதவுவதே நோக்கம் என்றால், அவருடைய சம்பளம் மட்டுமல்ல, அலவன்ஸையும் வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.என்று அவர் எளிமையாகக் கூறினார்.
இன்று இங்குள்ள மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலாக்கா மாநில அளவிலான கெமாஸ் மழலையர் பள்ளியின் விழாவில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
குற்றத்தின் வகையைப் பொருட்படுத்தாமல், அனைத்து கைதிகளும் தங்கள் தண்டனையின் பாதியை சிறையிலும், மீதிப் பாதியை வீட்டுக் காவலில் அனுபவிக்கவும் ஒரு சட்ட வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று முகமது இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
