நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுபாலமாக இருப்பது ஊடகவியலாளர்கள்: டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் புகழாரம்

கோலாலம்பூர்:

2026 பெர்கேசோ ஊடக விருது, தீபாவளி நிகழ்ச்சியில் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், அரசுக்கும் மக்களுக்கும் இடையே தகவல்களைப் பொறுப்புடன் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, மனிதவள அமைச்சகம், பெர்கேசோ, சட்டத் திருத்தங்கள் தொடர்பாக 40,000-க்கும் மேற்பட்ட ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதேவேளை, போலிச் செய்திகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்க்க, சந்தேகத்துக்குரிய தகவல்களை வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களைச் சரிபார்க்குமாறு ஊடகங்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஊடகப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்தும் அவர் உறுதியளித்தார். 

அண்மையில் விபத்தில் காயமடைந்த AP, பெர்னாமா செய்தியாளர்களின் பெர்கேசோ பங்களிப்பு விவரங்களைப் பெற்று, தகுந்த நலன்களை விரைவுபடுத்துமாறு தமது பத்திரிகைச் செயலருக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

மேலும், டிசம்பர் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் இரண்டு சட்டத் திருத்தங்களை முன்வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்:

* சட்டம் 789 திருத்தம்: சிங்கப்பூருக்குத் தினமும் வேலைக்குச் சென்று திரும்பும் சுமார் 400,000 தொழிலாளர்களுக்குப் பலன் அளிக்கும்.

* சட்டம் 800 திருத்தம்: மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய கொடுப்பனவு திட்டம் மூலம் 132,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்குப் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பெர்கேசோ ஊடக விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், சமூகப் பாதுகாப்பு குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset