செய்திகள் மலேசியா
அசாஹான் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் பிரதிநிதி சாலை விபத்தில் உயிரிழந்தார்
அசாஹான்:
அசாஹான் சட்டமன்றத் தொகுதிக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் தினேஷ் பாலசுப்பிரமணியத்தின் பிரதிநிதி ஜே. சேமிவேல் ஜெய்ராஸ் இன்று ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அசாஹான் மாநில சட்டமன்றத்தின் பிரதான செயல்பாட்டு அறைக்கு முன்பாக நிகழ்ந்தது.
மரணமடைந்தர் அலோர் காஜா கெஅடிலான் தொகுதியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
இவர், அசாஹான் தொகுதிக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் தினேஷ் பாலசுப்பிரமணியத்தின் பிரதிநிதியாக இருந்தார்.
இந்தச் செய்தியை நம்பிக்கை கூட்டணி தேர்தல் துறை புதன்கிழமை ஒரு ஊடக அறிக்கை மூலம் அறிவித்தது.
அவரது மறைவு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நீதிக் கட்சி உறுப்பினர்கள், அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு பெரும் இழப்பாகும்.
இறுதிச் சடங்குகளை அமைதியாக ஏற்பாடு செய்வதற்கு அவரது குடும்பத்தினருக்குப் போதுமான அவகாசம் அளிக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கை இன்று கூறியது.
மேலும் நம்பிக்கை கூட்டணி குறிப்பாக 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும், உயிரிழந்தவரின் அனைத்து சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.
மறைந்தவர் தனது பணிக்காலம் முழுவதும் ஆற்றிய அனைத்து சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும், குறிப்பாக 16ஆவது மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவர் ஆற்றிய கடின உழைப்பிற்கும் எங்களது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கெஅடிலான் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், மறைந்தவரின் குடும்பத்தினருக்கும் பிரச்சாரக் குழுவிற்கும் உதவுவதற்காக அசஹானில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 8:48 pm
நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுபாலமாக இருப்பது ஊடகவியலாளர்கள்: டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் புகழாரம்
November 11, 2026, 8:34 pm
உங்களின் ஒத்துழைப்பு பெர்கேசோவுக்கு தொடர்ந்து தேவைப்படும்: பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான்
November 11, 2026, 7:51 pm
நஜிப் குடும்பம் வீட்டில் தங்கவில்லை, உணவு டெலிவரியும் இல்லை: ஸாஹிட்டின் மகள் கூறுகிறார்
November 11, 2026, 5:06 pm
நவீன எந்திரமயமாக்கும் திட்டம்; நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்: டத்தோ வீரா ஷாகுல்
November 11, 2026, 12:54 pm
