செய்திகள் மலேசியா
உங்களின் ஒத்துழைப்பு பெர்கேசோவுக்கு தொடர்ந்து தேவைப்படும்: பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான்
கோலாலம்பூர்:
பெர்கேசோவின் 2026 ஊடக விருது விழா தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ சுபஹான் கமால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், துணை அமைச்சர், ஊடகத்தினர், பெர்கேசோ நிர்வாகத்தினர், விருந்தினர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு தர வாழ்த்தினார்.
பெர்கேசோவும் ஊடகங்களும் இணைந்து தொழிலாளர்களின் நலனுக்காகவும் சமூகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பணியாற்றுவதாக அவர் கூறினார்.
பெர்கேசோவின் பங்களிப்புகள், 24/7 பாதுகாப்புத் திட்டம் போன்ற நன்மைகள் குறித்து பலருக்குத் தெரியாததால், அவற்றை மக்களிடம் தெளிவாக எடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்கு முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெர்கேசோவின் பணிகளை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து செய்தியாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
உங்களின் ஒத்துழைப்பு பெர்கேசுக்கு தொடர்ந்து தேவைப்படும் என்றார்.
இந்த தீபாவளி விழா, ஊடகத்தினரின் பங்களிப்பைக் கொண்டாடும் நிகழ்வாகவும், “யாரும் பின்தங்கக்கூடாது” என்ற பெர்கேசோவின் நோக்கத்தை முன்னெடுக்கும் வாய்ப்பாகவும் உள்ளது என்று அவர் விவரித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 8:48 pm
நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுபாலமாக இருப்பது ஊடகவியலாளர்கள்: டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் புகழாரம்
November 11, 2026, 7:51 pm
நஜிப் குடும்பம் வீட்டில் தங்கவில்லை, உணவு டெலிவரியும் இல்லை: ஸாஹிட்டின் மகள் கூறுகிறார்
November 11, 2026, 5:57 pm
அசாஹான் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் பிரதிநிதி சாலை விபத்தில் உயிரிழந்தார்
November 11, 2026, 5:06 pm
நவீன எந்திரமயமாக்கும் திட்டம்; நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்: டத்தோ வீரா ஷாகுல்
November 11, 2026, 12:54 pm
