நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் அபராதத்தை செலுத்த 50 மில்லியன் ரிங்கிட் திரட்டியதற்கான ஆதாரங்களை அம்னோ வெளியிட வேண்டும்: டாக்டர் சத்தியபிரகாஷ்

அலோர்காஜா:

நஜிப்பின் அபராதத்தை செலுத்த 50 மில்லியன் ரிங்கிட் திரட்டியதற்கான ஆதாரங்களை அம்னோ வெளியிட வேண்டும்.

சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் கேந்திர இயக்குநர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இதனை வலியுருத்தினார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்துவதற்காக அம்னோ தலைமையால் திரட்டப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டின் ஆதாரம் குறித்து  கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிதி வசூல் சமூகத்தில் சந்தேகங்களை எழுப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய, பங்களிப்பாளர்களின் அடையாளம், ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்புத் தொகை, நிதியின் ஆதாரம் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதிலளிக்கப்பட வேண்டும்.

சிலர் இன்னும் தங்கள் வாழ்க்கைச் செலவுகள், மருத்துவக் கட்டணங்கள், குழந்தைகளின் கல்வித் தேவைகளைச் சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கும்போது, ​​ஒரு முன்னாள் பிரதமரின் அபராதத்தைச் செலுத்த இவ்வளவு பெரிய தொகையை எப்படி வசூலிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு உண்மையில் எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு உதவ முடியும்? பலருக்கு இன்னும் நிதி உதவி தேவைப்படும் நிலையில், இந்த நிதி வசூலுக்குப் பின்னால் உள்ள முன்னுரிமைகளை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும், அவரைப் பாதுகாக்க இன்னும் சிலர் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று நானும் வியக்கிறேன் என்று அவர்  ஓர் அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset