நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவீன எந்திரமயமாக்கும் திட்டம்; நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

நவீன எந்திரமயமாக்கும் (Automation) திட்டங்கள் நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்.

முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

பிரெஸ்மா எனப்படும் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன்.

இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது.

அதே வேளையில் இக் கூட்டத்திற்கு தலைமையேற்ற உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி,

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் அந்நியத் தொழிலாளர்களின் விகிதத்தை 10 விழுக்காடாகக் குறைப்பதும் அரசாங்கத்தின் இலக்கு என்று கூறினார்.

அமைச்சரின் கூற்றின் படி, வரும் ஆண்டுகளில் அந்நியத் தொழிலாளர்கள் முற்றிலும் கிடைக்காத சூழ்நிலை உருவாகலாம்.

ஆக உணவக உரிமையாளர்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

உனவகத் துறையில் நவீன எந்திரமயமாக்க வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை, சமையலறைப் பகுதி, நிர்வாகச் செயல்பாடுகள் முழுவதும் மீண்டும் செய்யப்படும் பணிகளைக் கையாள மென்பொருள், திறன்மிகு சாதனங்கள், ரோபோக்களைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க வழிவகுக்கும் என்று டத்தோ வீரா ஷாகுல் வலியுறுத்தினார்.

காலத்திற்கு தகுந்த மாற்றங்களை உணவகத் துறை உள்வாங்கி அதற்கேற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset