நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் கம்போங் மெலாயுவில் 11 நாட்களில் 4 முறை வெள்ளம்

சுபாங்:

சுபாங் கம்போங் மெலாயு  மக்கள் இந்த மாதத்தில் தங்களின் நான்காவது வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு, வானிலை ஆய்வு மையம், அந்த கம்போங் அமைந்துள்ள பெட்டாலிங் உட்பட சிலாங்கூரில் உள்ள பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையை விடுத்தது.

மூன்று மணி நேரம் கழித்து, சுபாங் கம்போங் மெலாயுவில்  நீர் மட்டம் 18.11 மீட்டராக இருந்ததாகவும், இது அபாய அளவான 17.4 மீட்டரைத் தாண்டியுள்ளதாகவும் நீர்ப்பாசனம், வடிகால் துறை தெரிவித்தது.

காலை 10.45 மணி நிலவரப்படி, நீர் மட்டம் 16.92 மீட்டராகக் குறைந்திருந்தது.

இது 16.9 மீட்டர் என்ற எச்சரிக்கை அளவை விட சற்றே அதிகமாகும்.

கடந்த இரண்டு வாரங்களில் நான்கு முறை வெள்ளம். இந்த ஆண்டு வரலாற்றிலேயே மிக மோசமானது என்று சமூக ஊடகத்தில் பலர் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset