நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் குடும்பம் வீட்டில் தங்கவில்லை, உணவு டெலிவரியும் இல்லை: ஸாஹிட்டின் மகள் கூறுகிறார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டு காவலில் தண்டனையை அனுபவிக்கும் போது, அவருடன் அவரது குடும்பத்தினர், வேறு நபர்கள் தங்க அனுமதி இல்லை என அம்னோ மகளிர் பிரிவு செயற்குழு உறுப்பினர் டத்தோ நூருல்ஹிதாயா அஹ்மத் ஸாஹிட் கூறியுள்ளார்.

அவர் துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடியின் மகள் ஆவார்.

நஜிப்பின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், தாமான் டூட்டா வீட்டில் தங்காமல், பெவிலியனில் உள்ள தனது இல்லத்தில் தங்குவார் என நூருல்ஹிதாயா கூறியுள்ளார்.

வீட்டு காவல்உத்தரவு எப்படி?

நடைமுறைப்படுத்தப்படும் என திரெட்ஸில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதை கூறியுள்ளார்.

ஜாலான் லங்காக் டூட்டா வீடு சிறையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதால், சாதாரண சிறை விதிகள் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

“முடியாது. வீடு சிறையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை என்ற கருத்தில் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது இல்லை.

அவரது குடும்பம் அவருடன் தங்காது. ரோஸ்மா பெவிலியனில் தங்குவார்” என அவர் கூறியுள்ளார்.

உணவு டெலிவரி இல்லை

ஆன்லைனில் உணவு வாங்க அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து உணவு, பானங்களையும் சிறை அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

“ஆமாம். உணவு, பானங்கள் அனைத்தும் சிறையால் தீர்மானிக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

பார்வையிடும் நேரம் சிறை போலவே இருக்கும்

பார்வையிடும் நேரங்களையும் அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். சிறைகளில் உள்ள நடைமுறை போலவே அது நடக்கும் என அவர் கூறியுள்ளார்.

“பார்க்க விரும்பினால், சிறையில் உள்ளவர்களுக்கு இருப்பது போல நிர்ணயிக்கப்பட்ட பார்வையிடும் நேரம் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

நஜிப் இன்னும் கைதிதான்

நஜிப் தொடர்ந்து கைதி நிலையில் இருப்பதாகவும் நூருல்ஹிதாயா உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஆமாம். புரியாதவர்களுக்கு, அவருக்கு கைதி நிலை உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

நேற்று, உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின், நவம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விடுதலை உத்தரவை ரத்து செய்து, நஜிப்பை காஜாங் சிறையில் இருந்து அவரது வீட்டிற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு, SRC இன்டர்நேஷனல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தண்டனையின் மீதியை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டு காவலில் அனுபவிக்க அனுமதிக்கிறது.

ஆனால் குழப்பம் நீடிக்கிறது

கடந்த மாதம் அக்டோபர் 14-ஆம் தேதி, நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது ஷஃபி அப்துல்லா, நஜிப் குடும்பத்துடன் வாழலாம் என கூறியிருந்தார். ஆனால், இப்போது நூருல்ஹிதாயாவின் கூற்று அதற்கு மாறாக உள்ளது.

நஜிப்பின் வழக்கறிஞரும் கூட, குடும்பத்தினர் தங்குவது குறித்த உண்மையான நிபந்தனைகள் இன்னும் தெரியவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

“எனக்கு தெரியாது. ஒருவேளை சில குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படலாம். ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். எங்களுக்கு தெரியாது” என அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நாளை விளக்கம்

இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset