செய்திகள் மலேசியா
உணவகத் துறைக்கு மாற்றுத் தொழிலாளர்களுக்கான அனுமதி கிடைத்தாலே அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்: டத்தோ மோசின்
கோலாலம்பூர்:
உணவகத் துறைக்கு மாற்றுத் தொழிலாளர்களுக்கான அனுமதி கிடைத்தாலே அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
பிரெஸ்மா தலைவர் டத்தோ முஹம்மத் மோசின் இதனை கூறினார்.
பிரெஸ்மாவின் 22ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று தலைநகரில் மாட்ரேட் மண்டபத்தில் நடைபெற்றது.
நாடு தழுவிய நிலையில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டை உள்நாட்டு வாணிபம் வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் தலைமையேற்றார்.
சங்கத்தின் சார்பில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக எல்பிஜி கேஸ் குறித்த விவகாரத்திற்கு அமைச்சு தீர்வு காண்பதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.
மேலும் பிரதமர் அறிவித்த 15,000 அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பத்தை மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக கூறினார்.
ஆரம்பத்தில் இந்த 15,000 தொழிலாளர்களும் உணவகத் துறைக்கு என நினைத்தோம்.
ஆனால் இப்போது ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் அந்நியத் தொழிலாளர்கள் உணவகத் துறைக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.
அதே வேளையில் உணவகத் துறைக்கான மாற்றுத் தொழிலாளர்கள் அனுமதியை அரசாங்கம் விரைந்து கொடுக்க வேண்டும்.
இந்த அனுமதி கிடைத்தாலே இத் தொழில் துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும்.
ஆக அரசாங்கம் இதை பரிசீலிக்க வேண்டும் என்று டத்தோ மோசின் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 8:48 pm
நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுபாலமாக இருப்பது ஊடகவியலாளர்கள்: டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் புகழாரம்
November 11, 2026, 8:34 pm
உங்களின் ஒத்துழைப்பு பெர்கேசோவுக்கு தொடர்ந்து தேவைப்படும்: பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான்
November 11, 2026, 7:51 pm
நஜிப் குடும்பம் வீட்டில் தங்கவில்லை, உணவு டெலிவரியும் இல்லை: ஸாஹிட்டின் மகள் கூறுகிறார்
November 11, 2026, 5:57 pm
அசாஹான் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் பிரதிநிதி சாலை விபத்தில் உயிரிழந்தார்
November 11, 2026, 5:06 pm
நவீன எந்திரமயமாக்கும் திட்டம்; நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்: டத்தோ வீரா ஷாகுல்
November 11, 2026, 12:54 pm
