நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் முக்கிய தூணாக விளங்குகின்றனர்: டத்தோ அர்மிசான்

கோலாலம்பூர்:

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களுக்கு முக்கிய தூணாக விளங்குகின்றனர்.

உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி இதனை கூறினார்.

பிரெஸ்மா எனும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய தூணாக விளங்குகின்றனர்.

ஆக அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கும்.

குறிப்பாக உணவகத் துறையில் நிலவும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், 15,000 அந்நியத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டினை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பங்களை மனிதவள அமைச்சு பரிசீலித்து வருகிறது. அதற்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்.

அதே வேளையில், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் அந்நியத் தொழிலாளர்களின் விகிதத்தை 10 விழுக்காடாகக் குறைப்பதும் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

ஆகவே இலக்காக கொண்டே அமைச்சு செயல்படும். இருந்தாலும் முதலாளிகளின் பிரச்சினைகளுக்கும் செவி சாய்க்கப்படும் என்று டத்தோ அர்மிசான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset