செய்திகள் மலேசியா
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை; மாதம் 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரஸ்மா ஆண்டுக் கூட்டத்தில் டத்தோ அர்மிசான் அறிவிப்பு
கோலாலம்பூர்:
உலகச் சந்தையில் கச்சா பாமாயிலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டு முறையை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி இதனை கூறினார்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு முன்வைத்த இந்தப் புதிய நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன: அவை பின்வருமாறு:
• 1 கிலோ – 6.90 ரிங்கிட்
• 2 கிலோ – 13.30 ரிங்கிட்
• 3 கிலோ – 19.60 ரிங்கிட்
• 5 கிலோ – 30.90 ரிங்கிட்
இந்த விலைக் கட்டுப்பாட்டு முறையைச் செயல்படுத்துவதற்காக, நிர்ணயிக்கப்பட்ட விலையில் எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதற்காக மாதந்தோறும் சுமார் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் உலகச் சந்தையில் கச்சா பாமாயிலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2026 அக்டோபர் மாதத்தில் ஒரு டன் கச்சா பாமாயிலின் சராசரி விலை 4,400 ரிங்கிடாக இருந்தது.
அரசாங்கத்தின் தலையீடு இல்லையெனில், 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெயின் விலை 34 ரிங்கிட் வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதுடன், விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரெஸ்மாவின் 22ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்த டத்தோ அர்மிசான் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 8:48 pm
நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுபாலமாக இருப்பது ஊடகவியலாளர்கள்: டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் புகழாரம்
November 11, 2026, 8:34 pm
உங்களின் ஒத்துழைப்பு பெர்கேசோவுக்கு தொடர்ந்து தேவைப்படும்: பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான்
November 11, 2026, 7:51 pm
நஜிப் குடும்பம் வீட்டில் தங்கவில்லை, உணவு டெலிவரியும் இல்லை: ஸாஹிட்டின் மகள் கூறுகிறார்
November 11, 2026, 5:57 pm
அசாஹான் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் பிரதிநிதி சாலை விபத்தில் உயிரிழந்தார்
November 11, 2026, 5:06 pm
நவீன எந்திரமயமாக்கும் திட்டம்; நாட்டில் உணவகத் துறை நிலைத்து நிற்க உதவும்: டத்தோ வீரா ஷாகுல்
November 11, 2026, 12:54 pm
