செய்திகள் மலேசியா
காடேக்கில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடராஜா நேரில் சென்று உதவினார்
காடேக்:
காடேக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகத் தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கப்பட்டது.
காடேக் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் நடராஜா செல்லப்பா இதனை தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த பொருட்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும், முதியவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவியது.
மேலும் நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பே தற்போதைய முதன்மையான நோக்கம்.
தேவையான உதவிகள் கிடைக்கும் வரை தொடர்ந்து களத்தில் இருந்து நிலைமையைக் கண்காணித்து உதவிகளை ஒருங்கிணைப்பேன் என்று அவர் உறுதியளித்தார்.
வெள்ள நீரில் இறங்க வேண்டாம். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும்.
குழந்தைகளை ஆபத்தான நீரோட்டம், வடிகால்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அவசர உதவிக்கு 999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
காடெக் மக்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை.
இன்பத்திலும் துன்பத்திலும் மக்களுடன் இணைந்து நிற்போம் என நடராஜா செல்லப்பா தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
