செய்திகள் மலேசியா
பண்டார் செந்தோசா பகுதியில் திடீர் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க வடிகால் அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது: டாக்டர் குணராஜ்
செந்தோசா:
செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வடிகால் அமைப்புகளை ஆய்வு செய்து, வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்கான உடனடி, நீண்டகால நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
இந்த ஆய்வில் கிள்ளான் மாநகர் மன்றம், பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன, வடிகால் துறை, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே, KDEB Waste Management மற்றும் சம்பந்தப்பட்ட மன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வின் போது, ஜாலான் உலு பாலாங் சந்திப்பு, ஜாலான் கெபூன் நனாஸ், ஜாலான் சுங்கை ஜாத்தி, ஜாலான் ராஜா நோங், சுங்கை அவ்ர், ஜாலான் டத்தோ டகாங் 6 உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஜாலான் உலு பாலாங் பகுதியில் WCE திட்டத்தின் இருபுறங்களிலும் வடிகால் கட்டுமானப் பணிகள் முழுமையடையாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரான ஐஜேஎம் நிறுவனம் வடிகால்களை உடனடியாகச் சுத்தம் செய்து, ஆழப்படுத்துவதுடன் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஜாலான் கெபூன் நனாஸ் பகுதியில் வடிகால்களில் புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், அவற்றை அகற்றி, தேங்கியுள்ள மண், குப்பைகளை அகற்றுவதற்கு பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அதேபோல் ஜாலான் சுங்கை ஜாத்தி, கேஎப்சி சந்திப்பு பகுதியில் உள்ள நிலத்தடி நீர்வழிப் பாதையின் கொள்ளளவு போதுமானதாக உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது உள்ள இரண்டு நீர்வழிப் பாதைகளையும், குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரிய கொள்ளளவு கொண்டதாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சுங்கை அவ்ர் பகுதியில் ஆற்றில் உள்ள மண் படிவுகள், குப்பைகளை அகற்றி, ஆற்றை ஆழப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டத்தை மேம்படுத்தவும் நீர்ப்பாசனத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஜாலான் டத்தோ டாகாங் 6 பகுதியில் குப்பைகளால் அடைபட்டிருந்த வடிகாலை உடனடியாகச் சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
1. சுமார் 90 மில்லிமீட்டர் அளவுக்கு பெய்த கனமழை.
2. சுமார் 5.1 மீட்டர் உயரத்தை எட்டிய அதிக அலைநீர்.
இந்த இரு காரணங்களும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மழைநீர் ஆறுகள் மற்றும் பிரதான வடிகால்களுக்குச் செல்வதில் தாமதத்தை ஏற்படுத்தியதாக அவர் விளக்கினார்.
இருப்பினும், வானிலை காரணங்களைக் கூறி வடிகால் பராமரிப்புப் பணிகளைப் புறக்கணிக்க முடியாது.
அனைத்து வடிகால்களும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
