செய்திகள் மலேசியா
குவாசா டாமன்சாரா MRT நிலைய நிறுத்துமிடத்தில் திடீர் வெள்ளம்: வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி
கோலாலம்பூர்:
இன்று காலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, குவாசா டாமன்சாரா MRT ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் திடீரென வெள்ளநீர் புகுந்ததால் அங்குச் சென்ற பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாகினர்.
இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை @evil.dr.porkchopp எனும் சமூகவலைதளப் பயனர் தனது 'திரெட்ஸ்' (Threads) பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த செய்தி இணையத்தில் வேக பரவியது. காலை 7.20 மணியளவில் வாகனங்களைச் சுற்றி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாக அவர் பதிவிட்டிருந்தார்.
அங்குத் தனது காரை நிறுத்தியிருந்த @ahtzumae எனும் பயனர், "இன்று காலைதான் காரை நிறுத்திவிட்டுச் சென்றேன். இந்தப் படங்களைப் பார்த்ததும் நெஞ்சே பதறுகிறது; தண்ணீர் மேலும் உயரக்கூடாது என்றுதான் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தனது கவலையைப் பகிர்ந்திருந்தார்.
இருப்பினும், காலை 9.30 மணியளவில் வெள்ளநீர் வடியத் தொடங்கிவிட்டதாகவும், லேசான தூறல் மட்டுமே நீடிப்பதாகவும் அதே பயனர் தனது அடுத்தடுத்த பதிவுகளில் நிம்மதியுடன் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவம் நடந்தபோது தாம் '118' பகுதியைச் சென்றடைந்திருந்தபோதிலும், காரைப் பத்திரமாக மீட்டாக வேண்டும் என்பதால் உடனடியாக மீண்டும் கேவாசா டாமன்சாரா நிலையத்திற்கே திரும்பியதாக அவர் கூறினார். நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, அன்றைய தினம் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து @tushihawary எனும் இணையவாசி கவலை தெரிவித்தார். அதேவேளை, கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழும் வாகன உரிமையாளர்கள் அனைவரும் இயற்கை பேரிடர் காப்பீடு வைப்பது இப்போது அவசியமாகிவிட்டது என @chemurad குறிப்பிட்டார்.
இதற்கு முன் கடந்த ஆண்டும் இதே வாகன நிறுத்துமிடத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதை @wwyeenkhalid நினைவுகூர்ந்தார். அப்போது கடைசி வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் சக்கரங்கள் முழுமையாக மூழ்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
