செய்திகள் மலேசியா
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி வெளியேற முடியுமா ? ஜாஹித் ஹமிடிக்கு லோக் சியூ ஃபூக் நேரடி சவால்
மலாக்கா:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி விலகுமாறு DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் சவால் விடுத்துள்ளார்.
இருப்பினும், பதவி மற்றும் அரசியல் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் அக்கூட்டணி அவ்வாறு செய்யத் துணியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையை மாற்றியமைப்பதற்குப் பதிலாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் எனப் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமத் ஜாஹித் ஹமிடி முன்வைத்த கருத்துக்குப் பதிலடி கொடுத்தார்.
தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போதிலும், DAP கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்திருப்பதாக லோக் குறிப்பிட்டார்.
இதன் மூலம் அன்வார் தொடர்ந்து நாட்டின் பிரதமராக நீடிப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.
கூட்டுப் பொறுப்பு என்ற கோட்பாட்டின்படி அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நேர்கோட்டுச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய லோக், முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தபோதிலும் பாரிசான் நேஷனல் ஏன் இன்னும் அரசாங்கத்தை விட்டு விலகவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அரசாங்கப் பதவிகளை இழந்தால் தங்களின் அரசியல் செல்வாக்கும் மங்கிவிடும் என்பதால் தான் அவர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிக்க விரும்புவதாகக் குற்றம் சாட்டிய லோக், மலாக்காவில் அவர்களின் அகந்தைப் போக்கை முறியடிக்க பொதுமக்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, எஸ்சிஆர் இன்டர்நேஷனல் வழக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து, அந்தோனி லோக் தமது போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
