செய்திகள் மலேசியா
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
புத்ராஜெயா:
ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தமக்கு விதிக்கப்பட்ட எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை, இன்றைய தினம் முதல் வீட்டுக் காவலில் கழிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவத் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,
2022 டிசம்பர் முதல் போக்குவரத்து அமைச்சகத்தை வழிநடத்தும் பொறுப்பைத் தமக்கு வழங்கியதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அந்தோனி லோக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
போக்குவரத்து அமைச்சிற்கு நான் தலைமை வகித்த காலத்தில், அதன் மூத்த நிர்வாகத்தினர், பணியாளர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பின் பொறுப்பேற்பவரிடம் பணிகளைச் சுமூகமாக ஒப்படைக்க நான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.
இதன் மூலம் அமைச்சின் பொறுப்புகளும் முன்னெடுப்புகளும் மக்களுக்காகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்வேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:17 pm
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
