செய்திகள் மலேசியா
இந்த விவகாரத்தை முடித்து விடுங்கள்; நஜிப்பின் வீட்டுக் காவல் குறித்து இனி எந்த சர்ச்சைகளும் எழாது என நம்புகிறேன்: ஜாஹித்
கோலாலம்பூர்:
இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் குறித்து இனி எந்த சர்ச்சைகளும் எழாது என நம்புகிறேன்.
துணைப் பிரதமரும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளபடி, மாமன்னரின் முடிவுகளையும் அதிகாரங்களையும் அனைத்துக் கட்சிகளும் மதிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். இனிமேல் எந்த சர்ச்சைகளும் எழுப்பப்படாது.
சட்ட வல்லுநர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தை நிலைநாட்டுபவர்களாக இருந்தாலும் சரி, மாமன்னரின் உத்தரவுகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என நம்புகிறேன்.
அலோர் காஜாவில் நடைபெற்ற ரிஸ்டா நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:17 pm
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
November 10, 2026, 9:16 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
