நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், இன்று முதல் உடனடியாக காஜாங் சிறையிலிருந்து இங்குள்ள தாமான் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு மாற்றப்படுகிறார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை, முன்னாள் பிரதமர் வீட்டுக் காவலில் கழிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் கடந்த நவம்பர் 6 ஆம் தேதியிட்ட, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவதன் பேரில் பிறப்பிக்கப்பட்ட விடுதலை உத்தரவை ரத்து செய்தார்.

அதற்குப் பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்திய பின்னர் பிறப்பிக்கப்பட வேண்டிய விடுதலை உத்தரவு கோரி தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) தாக்கல் செய்த மனு தொடர்பாக, நஜிப்பின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி அஸ்லாம் ஜைனுதீன் இந்த முடிவை எடுத்தார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை இன்று முதல் 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் கழிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset