செய்திகள் மலேசியா
நஜீப்பின் வீட்டுக் காவல் விவகாரத்தில், சட்டத்துறை தலைவர் அலுவலகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது: வழக்கறிஞர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
நஜிப் மீதான வீட்டுக் காவல் உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக, கடைசி நேரத்தில் சட்டத்துறை தலைவர் அலுவலகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாஃபி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ டுசுகி மொக்தார் வெளியிட்ட அறிக்கை, முன்னதாக அதே அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.
இது முற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்படியானால், அவர்களின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?.
வீட்டுக் காவல் உத்தரவை இருவேறு விதமாகப் புரிந்துகொள்ளலாம் என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் கூறுகிறதா, அல்லது அந்த உத்தரவிலேயே குறைபாடு உள்ளது என்று கூறுகிறதா?.
இவை இரண்டும் வெவ்வேறு சிக்கல்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வுகள் உள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:17 pm
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
November 10, 2026, 9:16 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
