நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்

கோலாலம்பூர்:

அமைச்சரவை மாற்றம் குறித்து பேசுவதற்கு இன்னும் மிகவும் சீக்கிரம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். 

இன்று இங்கு சர்வதேச கட்டுமான வார திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகங்களுக்கு பதிலளித்துள்ளார்.

“மிகவும் சீக்கிரம். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு காலி இடங்கள் வரக்கூடும் என்பதால் அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகம் அதிகரித்துள்ளது.

1. போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்,  அவர் செப்டம்பர் 28-ஆம் தேதி அன்வாரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்று தெரிகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்குக்கு வழங்கப்பட்ட நிபந்தனை அரச மன்னிப்பை எதிர்த்து கட்சி எடுத்த முடிவை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது.. 

ஆனால், லோக்கின் ராஜினாமா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நஜிப் தனது இல்லத்திற்கு வந்து வீட்டு காவலில் தண்டனையை அனுபவிக்க தொடங்கிய பிறகுதான் பதவி விலகுவேன் என அவர் தெளிவாக கூறியுள்ளார்.

2. நிதி அமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அஸிசானின் டேவான் நெகாரா நியமனம் டிசம்பர் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

இது குறித்து கேட்டபோது, அன்வார் தனக்கு இன்னும் எந்த தகவலும் வரவில்லை என கூறியுள்ளார்.

“அப்படியா, அவரது நியமன காலம் முடிகிறதா? அமிர் ஹம்சா எதுவும் எனக்கு சொல்லவில்லை” என அவர் கூறியுள்ளார்.

அமிர் ஹம்சாவின் செனட்டர் பதவி காலம் டிசம்பரில் முடிகிறது. அவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமென்றால், அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கம் விரைவில் அமைச்சரவை வரிசையில் மாற்றம் செய்யலாம் என முன்பு செய்திகள் வந்திருந்தன. ஆனால், பிரதமர் இப்போது அதை மறுத்து, இன்னும் சீக்கிரம் என கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset