நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இன்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பியதற்கு  அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

"அல்ஹம்துலில்லாஹ்," என்று அவர் சற்று நேரத்திற்கு முன்பு சுருக்கமாகக் கூறினார்.

மேலும், நஜிப் தனது சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்காகத் தங்கள் இல்லத்திற்குத் திரும்புவதை அவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

குறைக்கப்பட்ட தனது ஆறு வருட சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று நஜிப்பிற்கு இன்று உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையில், இல்லத்திற்கு வெளியே நிலவிய சூழல் அமைதியாகவும், பாதுகாப்பு ஒழுங்காகவும் காணப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset