செய்திகள் மலேசியா
தடம் புரண்ட கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர்: மூவர் காயம்
ஜொகூர்பாரு:
கார் சறுக்கி தடம் புரண்டு தீப்பிடித்த சம்பவத்தில் இருவர் தீயில் கருகி மாண்டனர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை, பெர்மாஸ் நோக்கிச் செல்லும் ஜாலான் பக்கார் பத்து சாலையில் நிகந்தது.
ஜொகூர் ஜெயா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி ரசாலி ஹுசைன், அதிகாலை 4.35 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தமக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
சாலையோரத்தில் ஒரு கார் சறுக்கி கவிழ்ந்து தீப்பிடித்தது.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர். தீயணைப்புப் படையினர் வருவதற்குள் மூவர் வாகனத்திலிருந்து வெளியேறினர்.
கால், கைகளிலும் தீக்காயங்களுடன் இருந்த 23 வயது ஆண் பாதிக்கப்பட்டவருக்கு, இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் ஒருவர் பொதுமக்களால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், மற்றொருவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதது.
வாகனத்திற்குள் சிக்கிய இரண்டு பேர் கருகி மாண்டனர்.
ஆனால் அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் முதலுதவி குழாய் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிகாலை 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
