நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்தாக் ஆற்றில் நீர் பெருக்கம்; ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்: 7 பேரை தேடும் பணி தொடர்கிறது

கோல குபு பாரு:

கோல குபு பாரு,  பெர்தாக் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கத்தில் சிக்கிய ஒருவர் இன்று அதிகாலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

அதேவேளையில், மேலும் ஏழு பேரைத் தேடும், மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கண்டெடுக்கப்பட்டவர் உள்ளூர்வாசி என்பதை, சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பர் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் அதிகாலை 1.30 மணிக்கு பெர்தாக் பாலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார்.

மேலும் தேடுதல் பகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இன்று காலை தேடுதல், மீட்பு நடவடிக்கை தொடர்ந்ததாக அவர் கூறினார்.

முன்னதாக 20 வயது இளைஞர் ஒருவர், மேலும் நான்கு பேருடன் சுற்றுலா சென்றிருந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர்கள் உயிர் பிழைத்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், லதா ஜெபுஸில் இருந்த மற்றொரு குழுவைப் பற்றிய தகவல் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது.

அதில் ஏழு பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் பலர் உயிர் பிழைத்ததாகவும் அல்லது சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset