செய்திகள் மலேசியா
பகாங்கின் ஜெராண்டுட், ரொம்பினில் நாளை முதல் திடீர் வெள்ளம் ஏற்படலாம்: வானிலை ஆய்வுத் துறை
குவாந்தான்:
நாளை அதிகாலை 1 மணி முதல் வரும் சனிக்கிழமை இரவு 11.59 மணி வரை, ஜெரண்டுட், ரிம்பினில் உள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளில், குறிப்பாக வெள்ள அபாயம் உள்ள, தாழ்வான, ஆபத்தான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.
நீர்ப்பாசனம், வடிகால் துறையின் தேசிய வெள்ள முன்னறிவிப்பு எச்சரிக்கை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று காலை 8.30 மணிக்கு வானிலை ஆய்வுத் துறை விடுத்த தொடர் மழை எச்சரிக்கை, வெள்ள முன்னறிவிப்பு மாதிரியைத் தொடர்ந்து இந்த வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெராண்டுட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில்,
பகாங் ஆற்றுப் பகுதியை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள தாழ்வான பகுதிகளான பிளாக் 11-இல் உள்ள பெருமஹான் பெல்டா ஜெங்கா 24, தாமான் ரியா, பெருமஹான் சுங்கை ஜான், பெல்டா கெலாங்கி 1 மற்றும் 3, கம்போங் பாரு, கம்போங் பெசூல், கம்போங் ஜெராங்சாங் ஆகியவை அடங்கும்.
மேலும் ரொம்பின் சம்பந்தப்பட்ட இடங்கள் கம்போங் ஹவுரில் உள்ள ரொம்பின் ஆற்றுப் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டருக்குள் உள்ள தாழ்வான பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
ஆக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
