செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் இனி தரவு திருட்டு மட்டும் இல்லை, அன்றாட வாழ்க்கை பாதிப்பு வரை நீண்டுவிட்டது: NACSA எச்சரிக்கை
கோலாலம்பூர்:
சைபர் குற்றவாளிகள் இனி தரவுகளை திருடுவதோடு நிற்கவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில், உடல் அமைப்புகள், செயல்பாட்டு தொழில்நுட்பம் (OT) ஆகியவற்றை தாக்கும் பக்கம் திரும்பிவிட்டனர்.
தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (NACSA) தலைமை செயல் அதிகாரி டாக்டர் மேகாட் சுஹைரி மேகாட் தாஜுடின் இதனை தெரிவித்துள்ளார்.
மலேசியாவும் இந்த அச்சுறுத்தலில் இருந்து விலக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக சுகாதாரம், எரிசக்தி, நீர் விநியோகம், விநியோக சங்கிலி ஆகிய துறைகளில் உள்ள தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் குறிவைக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
ஐரோப்பாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், பல்பொருள் அங்காடி செயல்பாடுகளை முடக்கிய மீறல்கள், இரத்த வங்கி குளிர்பதன அமைப்புகளை பாதித்த சம்பவங்கள் ஆகியவை, அத்தியாவசிய பொது சேவைகளை சீர்குலைக்கவே வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை சைபர் தாக்குதல்கள் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் நிலைமை மேலும் சவாலாக மாறியுள்ளது. AI மூலம் சைபர் குற்றவாளிகள் பல நிறுவனங்கள் மீது ஒரே நேரத்தில் தானியங்கி ஊடுருவல்களை நடத்த முடிகிறது.
“இந்த திறன் உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்களின் அளவு, வேகம், தீவிரத்தை அதிகரித்துள்ளது. மலேசியாவும் மற்ற நாடுகளை போல இதே முறையை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருந்து விலக்கு இல்லை” என அவர் கூறியுள்ளார்.
இந்த முக்கிய துறைகளில் உள்ள OT அமைப்புகள், போதிய பாதுகாப்பு இல்லாமல் நேரடியாக இணையத்துடன் இணைக்கப்பட்டால், தாக்குதல்களுக்கு அதிகம் பாதிக்கப்படும் என அவர் விளக்கியுள்ளார்.
தேசிய முக்கிய தகவல் உட்கட்டமைப்பு (NCII) நிறுவனங்கள், முக்கிய செயல்பாட்டு அமைப்புகளை வெளிப்புற வலையமைப்புகளில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என NACSA வலியுறுத்தியுள்ளது.
சேவை தொடர்ச்சி திட்டங்களை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
“எந்த அமைப்பும் தாக்குதலில் இருந்து முழுமையாக தப்பிக்க முடியாது. ஆனால், தயார்நிலை, விரைவாக மீளும் திறன் ஆகியவை சம்பவத்தின் தாக்கத்தை பொதுமக்கள் மீது குறைக்கும்” என அவர் கூறியுள்ளார்.
சைபர் பாதுகாப்பு சட்டம் 2024சைபர் பாதுகாப்பு சட்டம் 2024 (சட்டம் 854), NCII நிறுவனங்கள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இது அவர்களது சேவை அமைப்புகளின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யும்.
NCII நிறுவனங்களாக வகைப்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு, NACSA சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் தயார்நிலை, கையாளுதல் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தயார்நிலையை உயர்த்த, ஆரம்பத்தில் கண்டறிய, அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க, சேவை தொடர்ச்சியை உறுதி செய்ய உதவும்.
இது முன்னெச்சரிக்கையான முன்கூட்டிய நடவடிக்கை. நாடு சைபர் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை என்றார்.
இதை தொடர்ந்து, அனைத்து துறை தலைவர்கள், NCII நிறுவனங்களுக்கு கண்காணிப்பை வலுப்படுத்தவும், எந்த சம்பவமும் இல்லாவிட்டாலும் வாராந்திர அறிக்கைகளை NACSA-விடம் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“NCTL-ஐ Moderate-ஆக உயர்த்தியது முன்கூட்டியே தயார்நிலையை அதிகரிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நாடு சைபர் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான அறிகுறி இல்லை” என்றார் மேகாட் சுஹைரி.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
