செய்திகள் மலேசியா
முதலாளிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக 92 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்து குடிநுழைவுத் துறை நடவடிக்கை: சைபுடின் நசுதியோன்
புத்ராஜெயா:
குடிநுழைவுத் துறை சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக, ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் 32,052 தனிநபர்கள், முதலாளிகளிடமிருந்து 91.78 மில்லியன் ரிங்கிட் அபராதம் வசூலிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.
முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மொத்த அபராதத்தில், 2,459 முதலாளிகளிடமிருந்து 50.04 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் 29,593 சட்டவிரோத குடியேறிகளுக்கு 41.74 மில்லியன் ரிங்கிட் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதலாளிகள் சம்பந்தப்பட்ட அபராதத் தொகை, மொத்த அபராதத்தில் 54.5 சதவீதமாகும்.
இதன் மூலம், சட்டத்தைப் பின்பற்றாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தரப்பினர் மீதும் குடிவரவுத் துறை அமலாக்க நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன என்பது தெரிகிறது.
குடிநுழைவுத் துறை அமலாக்கமானது சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.
மாறாக நிறுவப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் முதலாளிகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
