நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு: ஹம்ஸா

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அது ஒரு அரசியல் தேர்வு அல்ல.

ஆட்சியாளர்களின் நிறுவனம் தேசிய இறையாண்மையின் ஒரு தூணாக இருப்பதால், அரசாங்கம் பாரபட்சமாக நடந்துகொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் கூறினார்.

நாட்டின் சட்டங்களுக்கு இணங்க, மாமன்னர் பிறப்பித்த உத்தரவுகளை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவது அரசாங்கத்திற்கோ அல்லது எந்தவொரு கட்சிக்கோ உள்ள கடமையாகும்.

அரச மன்னிப்புகள், தண்டனைகளை ஒத்திவைத்தல் அல்லது குறைத்தல் தொடர்பான கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் உள்ள விஷயங்களில் இதுவும் அடங்கும் என்று அவர் கூறினார்.

மாமன்னர் பிறப்பித்த எந்தவொரு ஆணையையும் எந்தவொரு தரப்பினரும் மீறுவது, மறுப்பது அல்லது சிறுமைப்படுத்த முயற்சிப்பது ஆகியவை மன்னருக்கும் தேசத்திற்கும் செய்யும் பெரும் துரோகமாகும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அவர் இன்று முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset