செய்திகள் மலேசியா
தைப்பிங்கில் புதிய லிட்டில் இந்தியா நுழைவாயில்அலங்கார வளைவு அமைக்க 2 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு: இந்திய சமூகத்திற்கு 1.85 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி
தைப்பிங்:
தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, நலன் மற்றும் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய சமூகத்திற்காக 1.85 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துணையமைச்சர் ஓங் கா ஹோ இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பிங்கில் மாநகரில் நேற்றிரவு நடைபெற்ற தீபாவளி கலை பண பாட்டு நிகழ்வில் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக இந்தச் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, தைப்பிங் ஜாலான் பாசார் பகுதியில் புதிய ‘லிட்டில் இந்தியா’ நுழைவாயில் அலங்கார வளைவு அமைப்பதற்கு 200,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
ஈப்போவிலும் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸிலும் இருப்பதைப் போன்று, தைப்பிங்கிலும் இந்திய சமூகத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நுழைவாயில்அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளது.
தைப்பிங் ஜாலான் பாசார் பகுதியில் ஏற்கெனவே பல இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இப்பகுதி மக்கள் கூட்டத்தால் களைகட்டும் இடமாகத் திகழ்கிறது.
எனவே, இப்பகுதியை மேலும் அழகுபடுத்தி, இந்தியர்களின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தைப்பிங் லிட்டில் இந்தியா பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காக 500,000 ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளாட்சித் துறை அமைச்சின் ஒத்துழைப்புடன், அப்பகுதியில் இன்டர்லாக்கிங் கற்கள் பதித்து சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் மூலம் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
