செய்திகள் மலேசியா
மலேசியா வாழ் இந்தியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துகள்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையில் இருள் என்னும் துன்பங்கள் நீங்கி ஒளி என்னும் இன்பம் நிறைந்த பிரகாசத்தை வெற்றிக்கான முதல் அடியாக கொண்டு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு தத்தம் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட வேண்டுகிறேன் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பெருநாள்கள் என்றாலே ஒன்றாகக் கூடி, உறவுகளோடு கொண்டாடி மகிழ்வதுதான். அதுவும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் தீபாவளியைக் கொண்டாடுவது என்பது நல்லிணக்கத்தை உலக அளவில் மலேசியா காட்டுவதை நம்மால் உணர முடிகிறது
ஒற்றுமையே முதல் வாகையாக சூடி நமது இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எந்தவொரு சண்டைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து இந்த பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
தீயவை அழிந்து நன்மை தரும் ஒரு பண்டிகைதான் தீபாவளி. அதுவே நமது கவனக்குறைவால் பிறருக்கும் தீங்கு விளைவிப்பதாக மாறக் கூடாது.
மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
உறவுகள் இணைந்து, உள்ளங்கள் மகிழ்ந்து, இனிப்போடு கொண்டாடுவோம்; இடைவெளியை மறவோம் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
