செய்திகள் மலேசியா
நஜிப்பின் பொதுமன்னிப்பு உத்தரவை எதிர்ப்பது மாமன்னரின் உத்தரவை மீறுவதாகக் கருதப்படலாம்: இஸ்தானா நெகாரா
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிரான நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு உத்தரவை எதிர்க்கும் எந்தவொரு வாதமும், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவை மீறும் செயலாகக் கருதப்படுகிறது.
இன்று இஸ்தானா நெகாராவால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி,
நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு உத்தரவில் உள்ள அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதன் அமலாக்கம் குழப்பத்தையோ அல்லது நீடித்த நிச்சயமற்ற தன்மையையோ ஏற்படுத்தக்கூடாது.
மேலும், இந்த பொதுமன்னிப்பு உத்தரவு தெளிவானது. எந்தவிதமான குழப்பமும் அற்றது.
நஜிப் எதிர்கொள்ளும் வேறு எந்த வழக்கோடும் இதற்குத் தொடர்பில்லை என்றும் அந்த உத்தரவு வலியுறுத்தியுள்ளது.
2026 செப்டம்பர் 18ஆம் தேதியன்று, கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா கூட்டரசுல் பிரதேசங்களுக்கான பொதுமன்னிப்பு வாரியம், கூட்டாட்சி அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் நஜிப்பின் மனுவை ஆய்வு செய்துள்ளது.
கூட்டரசுல் பிரதேச அமைச்சர், தலைமை வழக்கறிஞரும் கலந்துகொண்ட மன்னிப்பு வாரியக் கூட்டம், பின்னர் மாமன்னர் உரிய ஆலோசனையை வழங்கியது.
50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு, நஜிப் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்று மாமன்னர் மேலும் உத்தரவிட்டார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
