செய்திகள் மலேசியா
இணைய தொலைதொடர்பு அளவீட்டில் மாற்றம்; மக்கள் வசிக்கும் பகுதிகளுடன் முக்கிய பொருளாதாரப் பகுதிகளும் சேர்க்கப்படும்: ஃபஹ்மி
பட்டர்வொர்த்:
இணையத் தொலைத்தொடர்பு இலக்குகளை, துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய பொருளாதாரப் பகுதிகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்துவது குறித்து தகவல் தொடர்பு அமைச்சும், மலேசிய தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையமும் (MCMC) ஆய்வு செய்யும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
தற்போதுள்ள Coverage of Populated Area (CoPA) எனப்படும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் தொடர்புகளை அளக்கும் முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
ஏனென்றால், குடியிருப்பு இல்லாத அல்லது மிகக் குறைவாக உள்ள பகுதிகள் கூட பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானவை.
இந்த யோசனையை நவம்பரில் தோஹாவில் நடைபெறும் சர்வதேச தொலைத்தொடர்பு சங்க (ITU) கூட்டத்திலும் மலேசியா முன்வைக்கும் என்று அவர் கூறினார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அப்பால் 5G, எதிர்கால தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவது குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்றார் அவர்.
பினாங்கு துறைமுக தனியார் 5G திட்டத்தை வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில் (NBCT) தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
பினாங்கு துறைமுகம் தான் மலேசியாவில் தனியார் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் முதல் துறைமுகம் ஆகும்.
தற்போதைய அளவீடு மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே கவரேஜை அளவிடுகிறது, ஆனால் துறைமுகங்கள், ரயில் நெட்வொர்க்குகள், முக்கிய நெடுஞ்சாலைகள் போன்ற பொருளாதார மையங்களுக்கும் 5G-க்கு உயர் செயல்திறன் கொண்ட இணைப்பு தேவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அப்பால், முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் உள்ள இடங்களையும் சேர்த்து இந்த அளவீட்டை விரிவுபடுத்த வேண்டுமா என்பதை ஆய்வு செய்யுமாறு அமைச்சையும் MCMC-ஐயும் கேட்டுக்கொள்வேன்" என்றார் ஃபஹ்மி.
தொடர்பு அமைச்சு, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்களில் 5G கவரேஜை விரிவுபடுத்தும். இதற்காக அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
