நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமானத்தை KLIA 2வில் தரையிறங்க விமானி 3முறை முயற்சி செய்தார்: ஆனால் வானிலை மிகவும் மோசமாக இருந்தது

சிப்பாங்:

விமானத்தை விமானி மூன்று முறை தரையிறங்க முயன்றார்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2  வான்வெளியில் விமானம் ஒரு மணி நேரம் வானில் பறந்தது.

நேற்று இந்தோனேசியாவின் மேடானில் இருந்து கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் பயணம் செய்த ஒரு மலேசியப் பயணி ஒருவர் இதனை கூறியுள்ளார்.

அவர் இதனை 'த்ரெட்ஸ்' தளத்தில் தனது பதற்றமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

விமானம் மிகவும் குலுங்கியதால் பயணிகள் தங்கள் இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக அவர் கூறினார்.

மேடானில் இருந்து பயணத்தைத் தொடங்கியபோது, ​​விமானி தரையிறங்குவதற்கான அறிவிப்பை வெளியிடும் வரை வானிலை மிகவும் நன்றாக இருந்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset