நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியது குறித்து எனக்குத் தெரியாது: ரோஸ்மா

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் இரண்டு பிரதிநிதிகள், அவரது கணவர் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்காக விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாகக் கூறப்படுவது குறித்து டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்குத் தெரியாது.

அபராதம் செலுத்தப்படலாம் என்பது உட்பட, இந்த விவகாரம் தொடர்பான எந்த முன்னேற்றங்கள் குறித்தும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ரோஸ்மா கூறினார்.

எனக்குத் தெரியாது, குடும்பத்தினருக்கும் இதுபற்றித் தெரிவிக்கப்படவில்லை என்று இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் கலப்பின சூரியசக்தி வழக்கின் நிர்வாகத்திற்காக ஆஜரான பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

பின்னர், கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நஜிப்பின் பிரதிநிதிகள் என்று நம்பப்படும் இரண்டு நபர்கள் பணம் செலுத்தும் இடத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டதாகக் கூறும் ஒரு செய்தி அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட் ரோஸ்மாவுக்குக் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset