நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்மொழிப் பாட நேரத்தை நிலை நிறுத்தும் கல்வியமைச்சின் முடிவு வரவேற்கத்தக்கது: சிவக்குமார்

கோலாலம்பூர்:

2027ஆம் ஆண்டு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் மலாய் மொழி, தமிழ் மொழி, சீனமொழிக்காக வாரம்தோறும் ஒதுக்கப்படும் 12 பாடவேளைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த கல்வி அமைச்சு எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேறறு ஆதரிப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.

இம் முடிவு ஆக்கப்பூர்வமானதாகவும் எல்லாத் தரப்பின் நம்பிக்கைக்குரியதாகவும் அமைந்திருப்பதாகவும் கூறினார்.

இம் முடிவானது கல்விகமைச்சர் ஃபட்லினா சிடேக், துணை கல்வியமைச்சர் வோங் கா வோ மேற்கொண்டிருப்பது பல்லினம் வாழும் நம் நாட்டில் மொழி கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்திருப்பதாகவும் கூறிய அவர் கல்வி அமைச்சு எடுத்திருக்கும் இம் முடிவு ஆக்கபூர்வமானதும் விவேகமானதும் என்றும் குறிப்பிட்டார்.

அதே வேளையில்,இவ்விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு முன்னர் பல்வேறு தரப்பின் ஆலோசனைகள், பார்வைகளையும் ஆராய்ந்து அதன் பின்னர் நல்லதோர் முடிவையும் எடுத்த கல்வியமைச்சை பாராட்டுவதாகவும் மேலும் கூறினார்.

மாணவர்களிடையே மொழி பாடங்களில் ஆற்றலை மேம்படுத்தவும் அவற்றில் மாணவர்கள் போதுமான நேரத்தை தொடர்வதற்கும் பயனளிக்கும் வகையில் 12 பாடவேளைகள் அமைந்திருக்கும் சாத்தியத்தை க் கல்வி அமைச்சு மீண்டும் உறுதி செய்திருப்பது அனைத்து தரப்பிற்கும் நிறைவான ஒன்றாக அமைந்துள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset