செய்திகள் மலேசியா
மாற்று நீர்வழிகள் இல்லாத பட்சத்தில், ஷாஆலம் தொடர்ந்து பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம்: கிர் தோயோ
ஷாஆலம்:
தற்போதுள்ள ஆறுகளைத் தவிர, நீர் ஓட்டத்திற்கு மாற்று நீர்வழிகளை அரசாங்கம் ஏற்படுத்தாவிட்டால், ஷா ஆலம் தொடர்ந்து பெரும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார், டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மது கிர் தோயோ கூறினார்.
சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விரைவான வளர்ச்சி, அருகிலுள்ள பகுதிகளைக் காட்டிலும் ஷாஆலம் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
தாம் திட்டமிட்டிருந்த கனால் சிட்டி வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்த விரிவான ஆய்வில், அத்திட்டமானது நூறாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்து, ஷா ஆலம் நகரில் 100 ஆண்டுகளுக்குப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டது.
இந்தத் திட்டத்தில், கிள்ளான் ஆற்றை லாங்காட் ஆற்றுடன் இணைக்கும் 18 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் அமைக்கும் பணியும் அடங்கும்.
கடல் மட்டம் குறையும்போது தேங்கும் நீரை கடலில் வெளியேற்றுவதற்கு முன்பு, ஷாஆலம், கோல லங்காட்டில் உள்ள இரண்டு முன்னாள் சுரங்க ஏரிகளை நீர் மட்ட சமநிலைப்படுத்தும் பகுதிகளாகப் பயன்படுத்தவும் இந்தக் கால்வாய் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, கால்வாயைச் சுற்றியுள்ள பகுதியில், ஆறுகள் அல்லது சிறிய கால்வாய்களால் சூழப்பட்ட வீடுகள் என்ற கருத்தாக்கத்துடன் ஒரு குடியிருப்புப் பகுதியை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதைவிட துரதிர்ஷ்டவசமாக அந்த நிலம் ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
