செய்திகள் மலேசியா
தாமான் ஸ்ரீ அலாம் நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் 200 குடும்பங்கள் பாதிப்பு
கோல சிலாங்கூர்:
சௌஜனா உத்தாமா, தாமான் ஸ்ரீ அலாம் பகுதியில், நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் நிரம்பி வழிந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் பெய்த மழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் நிரம்பி வழிந்து குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் புகுந்ததாக, சௌஜனா உத்தாமா குடியிருப்போர் பிரதிநிதிகள் சபையின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டுத் தலைவர் வான் இஸ்மாயில் ஹாஷிம் கூறினார்.
முந்தைய சம்பவங்களைப் போல அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் உடைந்து போகவில்லை.
மாறாக, அதன் கொள்ளளவால் நீரைத் தாங்க முடியாதபோது நிரம்பி வழிந்தது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, தாமான் ஸ்ரீ அலாம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் நிரம்பி வழிந்ததால் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர் மட்டம் பகுதிக்கு பகுதி மாறுபடுகிறது. சில இடங்களில் முழங்கால் ஆழம் உள்ளது.
ஆனால் ஸ்ரீ ஆலம் பகுதியில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகளில், நீர் சுமார் 0.3 மீட்டர் ஆழம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
