நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் வெள்ளம்: 9 நிவாரண மையங்களில் 1,120 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஷாஆலம்:

மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 1,120 பாதிக்கப்பட்டோருக்கு இடமளிக்கும் வகையில், சிலாங்கூரின் மூன்று பகுதிகளில் ஒன்பது தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சமூக நலத்துறையின் வெள்ளத் தகவல் இணையதளம், கோலா சிலாங்கூரில் நான்கு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவை 187 குடும்பங்களைச் சேர்ந்த 734 பாதிக்கப்பட்டோருக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

அவை ஈஜோக் துணை மாவட்டத்தில் உள்ள டேசா அமான் தேசியப் பள்ளி ஜெயா சேத்தியா தேசியப் பள்ளி, பத்து 8 ஈஜோக் தேசியப் பள்ளி, மற்றும் ஜெராமில் உள்ள டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளி ஆகும்.

கிள்ளான், பெக்கான் மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாயில்  4.14 மீட்டர் நீர்மட்டத்துடன் எச்சரிக்கை அளவை விட அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ பொது தகவல் வெள்ள இணையதளம் தெரிவித்துள்ளது.

கிள்ளான், தாமான் டேசா  கமுனிங்கில் உள்ள சுங்கை ரசாவ்வின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டி 2.87 மீட்டராக இருந்தது.

அதே சமயம் கோலா சிலாங்கூரில் உள்ள பரித் மஹாங்கில் உள்ள சுங்கை பூலோ அதே அளவை (எச்சரிக்கை நிலைக்கு மேலே) 4.05 மீட்டராகப் பதிவு செய்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset