செய்திகள் மலேசியா
ரயில் நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது: அந்தோனி லோக்
பெட்டாலிங்ஜெயா:
ரயில் சேவை நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் உட்பட, ரயில் சேவை நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க போக்குவரத்து அமைச்சு செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
ஆம், பல்வேறு தொழில்நுட்ப சவால்களை போக்குவரத்து அமைச்சி கீழ் எதிர்கொள்வதற்காக ரேப்பிட் கே.எல் நிறுவனம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
சேவைகளை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் முயற்சிப்போம்.
தமிழ் ஊடகவியலாளர்களுடனான போக்குவரத்து அமைச்சின் நட்புறவு சந்திப்பில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அக்டோபர் 30 அன்று, மக்களின் அன்றாட வழக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் என அஞ்சப்படும் ரயில் சேவை நெரிசல் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
ரயில் நிலையத்தில் நிலவும் நெரிசல் நிலை குறித்து, த்ரெட்ஸ் தளம் வழியாக ஒருவர் அன்வரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மற்றொரு முன்னேற்றத்தில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லோக் கூறினார்.
கோலாலம்பூரிலிருந்து கெடா, ஜொகூர் உள்ளிட்ட மேற்குக் கடற்கரை மாநிலங்களுக்கான மின்சார ரயில் சேவைக்கு ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
தீபாவளிக்கு முன்னதாகவே நாங்கள் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
மேலும், அதிகமான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு.ரயிலைப் பயன்படுத்தித் திரும்பும் வகையில், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கேடிஎன்பி பணியாற்றி வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
