நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்தியர்களின் 200 ஆண்டுக்கால வரலாறுகளை பதிவு செய்ய மலேசிய இந்திய ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

மலேசிய இந்தியர்களின் 200 ஆண்டுக்கால வரலாறுகளை பதிவு செய்ய மலேசிய இந்திய ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மலேசியா, தமிழ்நாடு உட்பட பல நாடுகளில் புதிய அரசாங்கங்கள் அமைத்தால் முந்தைய அரசாங்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகிறது.

அந்த அரசாங்கங்கள் ஒன்றுமே செய்யாலமா நாடு, நாட்டு மக்களும் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பது தான் என்னுடைய கேள்வி.

மலேசியாவை பொறுத்த வரை இந்தியர்கள் தோட்டங்களை விட்டு தாமதமாக தான் வெளியேறினர்.

ஆனால் பல போராட்டங்களுக்கு மத்தியில் கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் சாதித்துள்ளனர்.

மஇகாவின் முன்னாள் தலைவர்களான துன் சம்பந்தன் தொடங்கி துன் சாமிவேலு வரை பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்களாக இருந்து பல சாதனைகளை செய்துள்ளனர்.

இந்த சாதனைகளுக்கு பலருக்கு தெரியாது. அதே வேளையில் அதில் நமது தவறும் உள்ளது.

அதாவது நமது சாதனைகளை நம் முறையாக பதிவு செய்யவில்லை. இதனால் கால ஓட்டத்தில் அது மறைந்து விடுகிறது.

இதன் அடிப்படையில் தான் மலேசிய இந்திய ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்தியர்களின் 200 ஆண்டுக்கால வரலாறுகளை பதிவு செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

பத்துமலையில் கடாரம் கொண்டான் நூலை வெளியீடு செய்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வில் 2,000 ஆண்டுகள் பின்னோக்கி ராஜ ராஜ சோழனில் இந்நாட்டில் காலடி எடுத்து வைத்ததையும் பதிவு செய்ய வேண்டும் என என் நண்பர் கூறினார்.

எண்ணங்கள் நல்லா இருந்தால் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்பதற்கு ஏற்ப ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் இன்று கடாரம் கொண்டான் என்ற நூலையும் வெளியீடு செய்துள்ளார்.

இந்த நூலை வெளியீடு செய்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset