செய்திகள் தமிழ் தொடர்புகள்
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சி.விஜயபாஸ்கா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சோ்த்ததாக வழக்குப் பதியப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையில் சுகாதாரத் துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கா் இருந்தாா்.
இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, தமிழக ஊழல் தடுப்புத் துறை, அது தொடா்பான விசாரணையை அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறை, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கா் வீடு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை செய்தது.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சி.விஜயபாஸ்கா், அவரின் மனைவி ரம்யா ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நவ. 6-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் விஜயபாஸ்கரும், அடுத்த வாரம் நடைபெறும் விசாரணையில் அவரின் மனைவி ரம்யாவும் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கா், தவெகவில் இணைந்தார். உடனடியாக அவர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்களில் பங்கேற்றார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் விஜய்க்கு விஜய பாஸ்கர் வரவேற்பு அளித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது
October 30, 2026, 11:13 pm
தமிழகத்தில் தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு: விற்பனை தொடங்கியது
October 30, 2026, 10:41 pm
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
October 30, 2026, 10:31 pm
கடப்பிதழ் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
October 29, 2026, 3:35 pm
முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் K.N.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
October 27, 2026, 11:50 am
