நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் K.N.நேரு வீட்டில்  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை 

சென்னை: 

முன்னாள் தமிழ்நாடு அமைச்சரும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான K.N. நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர் 

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு.

இந்நிலையில், நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்த்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் சொதனை நடந்து வருகிறது. 25 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது K.N. நேரு மீது கவனம் திரும்பியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset