நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அன்பில் மகேஸ் மோசடி வழக்கு: நள்ளிரவுவரை நீடித்த விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைப்பு 

சென்னை:

மோசடி வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6 வரையில் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை திங்கள்கிழமையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாலும் அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன் இரவில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

திங்கள்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில், நவ. 6 வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அன்பில் மகேஸ் அடைக்கப்பட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset