நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை

சேலம்:

சேலம் சண்முகா மருத்துவமனை வளாகத்தில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற்ற கவிஞர் வாலி பிறந்த நாள் விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, 2026 ஆம் ஆண்டிற்கான கவிஞர்களுக்கான கவிஞர் வாலி விருதினைத் திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் கவிஞர் அறிவுமதி அவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கான கவிஞர் வாலி விருதினை எழுத்தாளர், திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் அவர்களுக்கும் வழங்கி, விழாப் பேருரையை ம இ கா துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன்  ஆற்றினார்.

தமிழ்த் திரைப் படங்களுக்கும் இலக்கிய உலகிற்கும் வாலிபக் கவிஞர் வாலி ஆற்றிய பங்களிப்பை டத்தோ ஸ்ரீ சரவணன் அவருக்கே உரிய பாணியில் உரைத்தார்.

இந்தப் பெருவிழாவில் சண்முகா மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் பன்னீர்செல்வம், திரைப்பட இயக்குநரும் நடிகருமான R. சுந்தர்ராஜன், திரு. முனைவர் M. S. சண்முகம், IAS, திரு. க. சிவகுருநாதன், திரு. நெல்லை பாலசுப்பிரமணியன், கவிஞர் பதுமைச் செல்வன், கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset