செய்திகள் தமிழ் தொடர்புகள்
கடப்பிதழ் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
கடப்பிதழ் (பாஸ்போர்ட்) தொடர்பான விண்ணப்பங்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை குளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது பாஸ்போர்ட் காலாவதியானதால் அதை புதுப்பிக்கக் கோரி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். என் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி, பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘மனுதாரர் மீது கீரனூர் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். பாஸ்போர்ட் தொடர்பான மனுக்களை விசாரணை நீதிமன்றங்கள் வழக்கு எண் வழங்கியதில் இருந்து 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். வெளிநாட்டுக்குச் செல்லும் உரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனுதாரருக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டால், அவரது தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். எனவே, அசாதாரணமான சூழ்நிலைகள் ஏதுமில்லாத பட்சத்தில், விசாரணை நீதிமன்றம் நிவாரணம் வழங்க மறுக்கக் கூடாது.
அதே நேரத்தில் கடப்பிதழின் செல்லுபடியாகும் கால அளவைக் கட்டுப்படுத்தலாம்.
மனுதாரர் இந்தியாவில் இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தகுந்த நிபந்தனைகளையும் விதிக்கலாம்.
தேவைப்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின் கீழ் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடலாம்.
விசாரணை நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மனுதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும்.
பாஸ்போர்ட் அலுவலர் மனுதாரரின் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, மனுவை நீதிபதி முடித்து வைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:13 pm
தமிழகத்தில் தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு: விற்பனை தொடங்கியது
October 30, 2026, 10:41 pm
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
October 29, 2026, 3:35 pm
முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் K.N.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
October 27, 2026, 11:50 am
அன்பில் மகேஸ் மோசடி வழக்கு: நள்ளிரவுவரை நீடித்த விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைப்பு
October 26, 2026, 8:04 pm
ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது
October 25, 2026, 1:10 pm
சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார்.
October 25, 2026, 8:46 am
'அர்னாப் புயல்' நாளை தமிழகத்தை தாக்கக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 22, 2026, 10:33 pm
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
October 21, 2026, 8:59 pm
