நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது

சென்னை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்படும்.

2026 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 2 ஆவது புயல் இதுவாகும். இதனால் தமிழகத்தில் நவம்பர் 2 ஆம் தேதி பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset