செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு: விற்பனை தொடங்கியது
சென்னை:
தமிழ்நாட்டில் அரிசி விலை, மளிகைப் பொருள்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பண்டிகை காலத்தில் கட்டுக்கடங்காத விலை உயர்வால் தவெக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை போன்று, இந்தாண்டு தீபாவளிக்கும் தமிழக அரசு வழங்கவுள்ளது.
இதன்படி, 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு”, ஒரு தொகுப்பு ரூ. 200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மளிகைத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு என 1.4 கிலோ எடையுள்ள பொருள்கள் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 6, 2026, 11:57 am
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
