செய்திகள் தமிழ் தொடர்புகள்
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை:
தமிழக கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும், கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கை பணியாளர் கொண்டு நிகர லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு ரூ. 3,000 கருணைத் தொகையும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை ரூ. 2400 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 44,573 பணியாளர்களுக்கு ரூ. 49.69 கோடி போனஸ், கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது
October 30, 2026, 11:13 pm
தமிழகத்தில் தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு: விற்பனை தொடங்கியது
October 30, 2026, 10:41 pm
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
October 30, 2026, 10:31 pm
கடப்பிதழ் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
October 29, 2026, 3:35 pm
முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் K.N.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
October 27, 2026, 11:50 am
அன்பில் மகேஸ் மோசடி வழக்கு: நள்ளிரவுவரை நீடித்த விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைப்பு
October 26, 2026, 8:04 pm
