நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

சென்னை: 

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள், இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.


TNPSC தேர்வு எழுதுனருக்கு வயது வரம்பு உயர்வு?

மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற கைம்பெண்கள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.

1. குரூப் - I பதவிகள்:

- பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு

- ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு

- மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47

- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: 47-ல் இருந்து 52 வரை

2. குரூப் - II & II-A:

- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

- ஒதுக்கீட்டுப் பிரிவு: வயது உச்ச வரம்பில்லை (ஏற்கனவே)

- மாற்றுத்திறனாளிகள் பொது: 40-ல் இருந்து 45

- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: வயது உச்ச வரம்பில்லை

3. குரூப் - IV:

- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

- பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37

- BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45

- SC, ST, ஆதரவற்ற விதவை: 35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 வரை!

எப்போது முதல் அமல்?
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset