நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் வெள்ளத் தணிப்புத் திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை சமர்பிக்க வேண்டும்: பிரதமர் உத்தரவு

ஷாஆலம்:

தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கைச் சந்தித்து வரும் கம்போங் மெலாயு சுபாங் பகுதி மக்களின் அவலநிலை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர், 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிலாங்கூர் வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்த சமீபத்திய அறிக்கையை இந்த வெள்ளிக்கிழமை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் உட்பட, இத்திட்டத்தின் செயலாக்க நிலை குறித்த தெளிவான சித்திரத்தைப் பெற விரும்புவதாக அன்வர் கூறினார்.

கம்போங் மெலாயு சுபாங்கில் இரண்டு அல்லது மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் நான் கவலைப்படுகிறேன். 

எனவே, மத்திய அரசு மட்டத்தில், இந்த வெள்ளிக்கிழமை அறிக்கையைக் கேட்பேன்.

இந்த வெள்ளிக்கிழமையும், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி மாநில அரசு மன்றக் கூட்டத்தை நடத்துவார்.

அவர் மாநில மட்டத்திற்காக வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்த சமீபத்திய அறிக்கையையும் கேட்பார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset